மாநில செய்திகள்

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன் பேட்டி + "||" + It is sad that Rajini is unable to vote KamalHaasan

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன் பேட்டி

ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது - கமல்ஹாசன் பேட்டி
தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது.  இந்த தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணி என இரு அணிகளாக பிரிந்து திரையுலகினர் சந்திக்கின்றனர். 

தேர்தலை முன்னிட்டு நடிகர், நடிகைகள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தபால் வாக்குப்படிவம் தாமதத்தால் ரஜினி வாக்களிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அடுத்தமுறை இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.