காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ; இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி - திருமாவளவன் எம்.பி.


காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் ; இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி - திருமாவளவன் எம்.பி.
x
தினத்தந்தி 25 Jun 2019 1:21 PM GMT (Updated: 25 Jun 2019 1:21 PM GMT)

காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்படும் என்று திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருமாவளவன் எம்.பி.  வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில்,

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும்,  இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம்.

பெங்களூருவில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்தப்பட்டால் அது கர்நாடகாவுக்கே சாதகமாக அமையும். கர்நாடகா அல்லாத ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்துவதே முறையாக இருக்கும்.

‘இனிவரும் காலங்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைமையிடமான பெங்களூருலேயே கூட்டலாம்‘ என்று தமிழக அரசு கருத்து தெரிவித்திருப்பது தமிழக நலனுக்கு எதிரானதாக உள்ளது.  

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரையே இதுவரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுவார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story