முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், பொதுப்பணித்துறை ஆய்வு கூட்டம்


முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், பொதுப்பணித்துறை ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 7:42 AM GMT (Updated: 26 Jun 2019 7:42 AM GMT)

பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை தொடர்பாக, துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவை வருகிற 28ஆம் தேதி கூடுகிறது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் வசம் உள்ள பொதுப்பணி, நெடுஞ்சாலை துறைகளின் மானிய கோரிக்கைகளை ஜூலை 15ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை தொடர்பாக கடந்த சனிக்கிழமை அன்று ஆலோசனை நடத்தினார். தற்போது பொதுப்பணித் துறை தொடர்பாக தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் பொதுப்பணித்துறையின் பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பொதுப்பணி துறை சார்பில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பணிகளின் நிலை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அணைகள் பாதுகாப்பு, அணைகள் பராமரிப்பு, காவிரி- கோதாவரி திட்டம், அத்திக்கடவு அவினாசி திட்டம், குடிமராமத்து திட்டப்பணிகள், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story