தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு


தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 26 Jun 2019 8:22 AM GMT (Updated: 26 Jun 2019 8:22 AM GMT)

தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை

தமிழகம் முழுவதும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அதன் விவரம் வருமாறு;

* மகேஷ்குமார் அகர்வால் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று போலீஸ் நிர்வாக துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 
* வெங்கட்ராமன் ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் கிரைம் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். 
* மாநில குற்ற ஆவண காப்பக ஏ.டி.ஜி.பி.யாக வினித் தேவ் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார். 
* சேலம் மாநகர ஆணையராக செந்தில்குமார் நியமனம்.
* ஐ.ஜி.யாக உயர்வு பெற்றுள்ள பிரேம் ஆனந்த் சின்ஹா சென்னை நகர(தெற்கு) கூடுதல் ஆணையராக நியமனம். 
* ஐ.பி.எஸ். அதிகாரி வனிதா சென்னையில் ரயில்வே துறையில் போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 
* ஐ.பி.எஸ். அதிகாரி டி.எஸ்.அன்பு சென்னையில் காவல் நிர்வாக ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். 
* ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நஜ்மல் ஹோடா தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமனம். 
* தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி மகேந்திரகுமார் ரத்தோடுக்கு பதவி உயர்வு.
* ஐ.பி.எஸ். அதிகாரி அபினவ்க்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம். 
* ஐ.பி.எஸ்.அதிகாரி ரூபேஷ்குமார் மீனா பதவி உயர்வு அளிக்கப்பட்டு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக நியமனம். 
* ஐ.பி.எஸ். அதிகாரி ஆனி விஜயாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமனம். 
* எம்.சத்தியப்பிரியாவுக்கு பதவி உயர்வு அளித்து போலீஸ் பயிற்சி கல்லூரியில் டி.ஐ.ஜி.யாக நியமனம்.
* கரண் சின்ஹா காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
* சென்னை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஆக கே.சங்கர் நியமனம்.
* ஸ்ரீதர் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமனம்.
* சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக ஈஸ்வர மூர்த்தி நியமனம். 
* சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை ஆணையராக கபில்குமார் சரத்கர் பணியிட மாற்றம்.
* வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக என்.காமினி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 
* சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பிரதீப்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 
* திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக வி.பாலகிருஷ்ணன் நியமனம்.
* திருச்சி; சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி. ஆகிறார் லலிதா லட்சுமி. 
* சென்னை பெருநகர (தெற்கு) போக்குவரத்து போலீஸ் இணை ஆணையராக எஜிலிரசானே நியமனம்.
* ஆர்.சுதாகர் சட்டம் ஒழுங்கு உதவி ஆணையராக நியமனம். 
* எம்.வி.ஜெய கவுரி சென்னை போக்குவரத்து உதவி ஆணையராக நியமனம். 
* என்.கண்ணன் நுண்ணறிவு பிரிவு துணை ஆய்வாளராக நியமனம். 

Next Story