மாநில செய்திகள்

தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி + "||" + Tamil Nadu Government will not accept any proposal to affect Tamil Nadu: Chief Minister Palanisamy

தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னை நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  பேரூரில் தினமும் 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் செயல்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.  

வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை- சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்தில் செயல்படுத்தப்படும். 

தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்துக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.  மழை பெய்யாததால்தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியவில்லை.  நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலை பணி 2021ல் முடிக்கப்பட்டு நீர் விநியோகிக்கப்படும்”என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி குறைய காரணம் என்ன? - மக்களவையில், தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி
தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி குறைந்ததன் காரணம் குறித்து மக்களவையில், தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
2. தமிழகத்தில் இந்தி திணிப்பு: மக்களவையில் தி.மு.க., பா.ஜனதா மோதல்
தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து மக்களவையில் தி.மு.க., பா.ஜனதா மோதலில் ஈடுபட்டது.
3. பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது
பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரையிலான 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4. முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவு
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
5. மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.