மாநில செய்திகள்

தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு + "||" + Fire in house at Tambaram, leaves three dead

தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து- மூன்று பேர் உயிரிழப்பு
தாம்பரம் அருகே வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை,

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். வீட்டில் இருந்து புகை வெளியேறியதைக் கவனித்த அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். 

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டின் பூஜை அறையில் தீப்பிடித்து, மற்ற இடங்களுக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் மஞ்சள் ஆலையில் தீ விபத்து; 4 பேர் காயம்
நெல்லையில் மஞ்சள் ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் காயம் காயமடைந்து உள்ளனர்.
2. நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து: 14 கடற்படை வீரர்கள் பலி
நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 கடற்படை வீரர்கள் பலியானார்கள்.
3. சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
4. செங்கல்பட்டில் மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; ஆவணங்கள் நாசம்
செங்கல்பட்டில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து நாசமாகின.
5. பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் தீ விபத்து
பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.