சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9 தீர்மானங்களை கொண்டுவர திமுக முடிவு


சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9 தீர்மானங்களை கொண்டுவர திமுக முடிவு
x
தினத்தந்தி 28 Jun 2019 6:36 AM GMT (Updated: 28 Jun 2019 6:36 AM GMT)

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9 தீர்மானங்களை கொண்டுவர திமுக முடிவு செய்துள்ளது.

சென்னை, 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜூலை 1 ஆம் தேதி அவை மீண்டும் கூடுகிறது. 

இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 9 தீர்மானங்களை கொண்டுவர திமுக முடிவு செய்துள்ளது.   குடிநீர் பிரச்சினை, மும்மொழிக் கொள்கை, வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும், உயர்மின் அழுத்த கோபுர விவகாரம், ஹைட்ரோ கார்பன்,  மாணவர்களின் கல்விக்கடன், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஆகிய பிரச்சினைகள் குறித்து தீர்மானம் கொண்டு வர திமுக மனு கொடுத்துள்ளது.  

தீர்மானங்களின் விவரங்களை சபாநாயகர் தனபாலிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கினார். 

Next Story