மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு


மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2019 5:32 AM GMT (Updated: 1 July 2019 5:32 AM GMT)

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கனிமொழி (தி.மு.க.), கே.ஆர்.அர்ஜூனன் (அ.தி.மு.க.), ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) ஆகிய 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 8-ந் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தி.மு.க. தரப்பில் தொ.மு.ச. பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், வக்கீல் வில்சன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மதிமுகவிற்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Next Story