மோடி அரசின் ஒற்றை இந்தியா முயற்சி; இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர் - சீமான் அறிக்கை


மோடி அரசின் ஒற்றை இந்தியா முயற்சி; இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட போர் - சீமான் அறிக்கை
x
தினத்தந்தி 2 July 2019 3:56 AM IST (Updated: 2 July 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

இந்தியா என்பது பலதரப்பட்ட தேசிய இனங்கள் மாறுபட்ட அடையாளங்களோடு சங்கமித்து, ஒன்றுபட்டு வாழும் ஓர் ஒன்றியம். ஆனால், ‘ஒரே மொழி! ஒரே நாடு! ஒரே பண்பாடு! ஒரே தேர்தல்! ஒரே தேர்வு! ஒரே பொதுவினியோகம்!‘ என ஒற்றை அடையாளத்தை நிலைநிறுத்த துடியாய்த் துடிக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு.

இந்தியா எனும் கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்றுக்கொண்ட பன்மைத்துவ நாட்டில் அதிகாரங்கள் யாவும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு, பரவலாக்கப்படும் போது தான் கூட்டாட்சித் தத்துவம் எனும் உயரிய கோட்பாடு உயிர்ப்பெறும். அதனைச் செய்யாது, நாட்டின் மொத்த அதிகாரத்தையும் ஓரிடத்திலே குவித்து வைத்து மாநிலங்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முற்படுகிறபோது அது இந்தியா எனும் கட்டமைப்பிற்கே பேராபத்தை உண்டாக்கும்.

ஆகவே, அகண்ட பாரதத்தைக் கனவாகக் கொண்டு ஒற்றை இந்தியாவை உருவாக்கத் துடிக்கும் மோடி அரசின் இச்செயல்கள் யாவும் மாநிலங்களின் தன்னாட்சி மீதும், இந்தியாவின் இறையாண்மையின் மீதும் தொடுக்கப்பட்ட போர் என்பதை புரிந்து விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையினை சீர்குலைக்கும் இம்முயற்சிகள் அனைத்தையும் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story