மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு


மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 2 July 2019 12:14 PM IST (Updated: 2 July 2019 12:14 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தலில் வைகோ போட்டியிட மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்- சபைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. சார்பில் 3 எம்.பி.க்களையும் போட்டியின்றி எளிதாக தேர்வு செய்ய முடியும்.

அ.தி.மு.க. சார்பில் பா.ம.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த இடம்  அன்புமணிக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க.வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு 1 இடம் தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ம.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய எழும்பூர் தாயகத்தில் இன்று கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் வைகோ தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  ம.தி.மு.க. வேட்பாளராக பொதுச்செயலாளர் வைகோ  போட்டியிட ஒரு மனதாக  முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

Next Story