இரு மொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது -அமைச்சர் செங்கோட்டையன்
இருமொழிக் கொள்கையில் தமிழகம் உறுதியாக இருக்கும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது;-
இருமொழிக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து கடைபிடித்து வருவதாகவும், அந்த முடிவிலேயே உறுதியாக இருப்பதாகவும் கூறினார். மூன்று மொழிக் கொள்கையால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும்.
தமிழகத்தில் என்றைக்கும் இரு மொழிக்கொள்கை தான், அதில் எந்த மாற்றமும் இல்லை. 1968-ம் ஆண்டு எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை அமலில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்.
Related Tags :
Next Story