தென்மேற்கு, மத்திய வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் -வானிலை மையம்


தென்மேற்கு, மத்திய வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்  -வானிலை மையம்
x
தினத்தந்தி 2 July 2019 3:03 PM IST (Updated: 2 July 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;-

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், சென்னை, காஞ்சிபுரம். திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இதன் காரணமாக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்.

சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை எங்கேயும் மழை பதிவாகவில்லை.

Next Story