தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனேயே அவரிடம் இருந்து விலகிவிட்டேன் - ரத்தினசபாபதி பேட்டி


தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனேயே அவரிடம் இருந்து விலகிவிட்டேன் - ரத்தினசபாபதி பேட்டி
x
தினத்தந்தி 2 July 2019 6:09 PM IST (Updated: 2 July 2019 6:09 PM IST)
t-max-icont-min-icon

தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனேயே அவரிடம் இருந்து விலகிவிட்டேன் என்று ரத்தினசபாபதி கூறினார்.

சென்னை,

தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தின சபாபதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதனையடுத்து   ரத்தினசபாபதி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தினகரன் தனிக்கட்சி தொடங்கிய உடனேயே அவரிடம் இருந்து விலகிவிட்டேன். அமமுக பற்றி நான் இப்போது விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.  டிடிவி தினகரனை மக்கள் புறக்கணித்துவிட்டனர். 

பிரபு, கலைச்செல்வன் ஆகியோர் விரைவில் அதிமுகவிற்கு வருவார்கள். மீண்டும் என்னை அதிமுகவுக்கு கொண்டு வந்தது அமைச்சர் விஜயபாஸ்கர் தான்.  

அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம், பிரிந்து சென்றவர்கள் திரும்ப வர வேண்டும். அதிமுகவை வலிமையுடன் நடத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். மீண்டும் எம்எல்ஏவாக செயல்படுவேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story