மாநில செய்திகள்

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Tamil Nadu government does not support projects that people do not like Jayakumar

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது -அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை,

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- 

சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம். தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது. டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம்.  மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது. 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்த கேள்விக்கு மக்கள் விரும்பும் திட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு என முதல்-அமைச்சரே கூறியுள்ளார். தமிழகம் குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறிய கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.