"முதலமைச்சரின் துறைகள் என்ன ஆச்சு?" -பேரவையில் கேள்வி எழுப்பிய துரைமுருகன்
முதலமைச்சரின் துறை சார்ந்த கேள்விகள் இடம்பெறாதது ஏன் என பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
சென்னை
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவுற்றதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், இதற்கு முன் கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும் என்றும் ஆனால் நீண்ட காலமாக இந்த துறைகளில் கேள்விகள் வருவதில்லை என்றும் கூறினார்.
முதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல என்றும் முதலமைச்சர் பதிலளிப்பதை பார்த்து தான் பலமுறை அசந்து போய் இருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க முதலமைச்சர் தயாராகவே இருக்கிறார் என்றும் இனி கேள்விகள் இடம்பெறும் என்றும் கூறினார்.
Related Tags :
Next Story