தமிழக சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை
மேகதாது அணை கட்டப்படும், காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்று தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ததாகவும், அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஏன் எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் நேற்று பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய பேரவையில் ராகுல்காந்தி குறித்து முதலமைச்சரின் கருத்துக்கு விளக்கம் அளிக்க காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி வழங்காததால் பேரவையில் இருந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story