ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழகம் 2ஆம் இடம் - தமிழிசை சவுந்தரராஜன் பதில்


ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழகம் 2ஆம் இடம் - தமிழிசை சவுந்தரராஜன் பதில்
x
தினத்தந்தி 3 July 2019 3:45 PM IST (Updated: 3 July 2019 3:45 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிக நிதியுதவி பெறுவதில் தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிக நிதியுதவி பெறுவதில், தமிழகம் 2-வது இடத்தில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. 

நாளிதழ் ஒன்றில் வந்த இந்த செய்தியை மேற்கோள்காட்டி பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக வசனம் பேசுபவர்களின் பார்வைக்கு என்று கூறி தி.மு.க தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பெயரையும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

Next Story