குட்கா ஊழல் வழக்கு : லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ. விசாரணை
இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் போலீசார் முதல் கட்டமாக 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை,
தற்போது 2-ம் கட்டமாக விசாரணை நடந்து வருகிறது. குட்கா ஊழல் நடந்தபோது சென்னை போலீசில் பணியாற்றிய உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தினார்கள். முதன் முதலில் இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பின்னர் தான் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
முதலில் இந்த ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்டு ஒருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் 2 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். வழக்கு விசாரணையை விரைவாக முடித்து இந்த வழக்கில் 2-வது கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story