தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி, ஓராண்டு சிறை -சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு


தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி,  ஓராண்டு சிறை -சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 5 July 2019 10:50 AM IST (Updated: 5 July 2019 10:50 AM IST)
t-max-icont-min-icon

தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தி.மு.க ஆட்சி காலத்தில் 2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. 2009-ல் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியது.

தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என  சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார்.

வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு  சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Next Story