மத்திய பட்ஜெட்: ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு - மு.க.ஸ்டாலின்


மத்திய பட்ஜெட்: ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பு - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 July 2019 1:16 PM GMT (Updated: 5 July 2019 1:16 PM GMT)

மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

மத்திய பட்ஜெட் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கவில்லை. 

மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும், மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்திற்கென்று எந்த பிரத்யேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நதிகள் இணைப்பு திட்டம் பற்றி நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை. கோதாவரி-கிருஷ்ணா-காவேரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. குடிநீர் பஞ்சத்தில் தவிக்கும் தமிழகத்திற்கு அரசு கோரிய ரூ 1000 கோடி நிதியை கூட ஒதுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story