தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் - உதயநிதி ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டார். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதல் கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். நாளை நடைபெற உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story