பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.512 அதிகரிப்பு


பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு எதிரொலி: தங்கம் விலை பவுனுக்கு ரூ.512 அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 9:38 PM GMT)

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேல் உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சற்று குறைந்தாலும், அதை சரிகட்டும் வகையில் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது.

சென்னை, 

நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 255-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.64-ம், பவுனுக்கு ரூ.512-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 319-க்கும், ஒரு பவுன் ரூ.26 ஆயிரத்து 552-க்கும் விற்பனை ஆனது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து நேற்று வரை மட்டும் கிராமுக்கு ரூ.103-ம், பவுனுக்கு ரூ.824-ம் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக தங்கம் விலை உயரும் போது, வெள்ளி விலையும் அதிகரிக்கும். ஆனால் நேற்று இதற்கு எதிர்மாறாக வெள்ளி விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு 20 காசும், கிலோவுக்கு ரூ.200-ம் குறைந்து, ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுக்கும், ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Next Story