சமூக ஆர்வலர் முகிலன் காட்பாடி ரெயில் நிலையத்தில் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு


சமூக ஆர்வலர் முகிலன் காட்பாடி ரெயில் நிலையத்தில் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 7 July 2019 12:17 AM IST (Updated: 7 July 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலர் முகிலன் காட்பாடி ரெயில் நிலையத்தில் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

முன்னதாக  முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்துச் சென்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர். முகிலனை விடுவிக்கக்கோரி அவரின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story