முகிலனை சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி விபத்தில் சிக்கினார்


முகிலனை சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி விபத்தில் சிக்கினார்
x
தினத்தந்தி 7 July 2019 10:30 AM IST (Updated: 7 July 2019 10:31 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலர் முகிலனை சந்திக்க சென்னை வந்த அவரது மனைவி விபத்தில் சிக்கினார்.

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.  சமூக ஆர்வலர் முகிலனை சந்திப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி சென்னைக்கு புறப்பட்டார்.  அவர் கள்ளக்குறிச்சி அருகே வந்த போது கார் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.  இதனால் லேசான காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story