நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முகிலனை விரைவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் சீமான் வலியுறுத்தல்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முகிலனை விரைவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் சீமான் என வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் போராட்டங்களங்களில் அயராது பங்கேற்று வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பான காணொளி ஆதாரத்தினை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்ட பிப்ரவரி 15-ந் தேதி முதல் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தர கோரி தமிழகம் எங்கும் அடையாள போராட்டங்களும், ஆட்கொணர்வு மனுவின் வாயிலாக சட்டப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்ட வேளையில், தற்போது வெளியாகியிருக்கிற காணொளியின் மூலம் அவர் ஆந்திர காவல்துறையின் வசமிருப்பது உறுதியாகியிருக்கிறது.
எனவே, முகிலனை விரைவாக நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பும் அளித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story