அமைச்சர் ஜெயக்குமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்


அமைச்சர் ஜெயக்குமாரும், நானும்  உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 8 July 2019 11:07 AM IST (Updated: 8 July 2019 1:38 PM IST)
t-max-icont-min-icon

தானும், அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உடல் உறுப்பு தான வார விழிப்புணர்வு விழாவை, சென்னையில்  அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் அமைச்சர்கள் ஜெயக்குமாரும், விஜயபாஸ்கரும் தொடங்கி வைத்தனர். உடல் உறுப்பு தானம் செய்த 5 பேர்களின் குடும்பத்தினருக்கு  பாராட்டுகள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கினர். உடல் உறுப்பு தானம் என்ற பொருளை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நானும், அமைச்சர் ஜெயக்குமாரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது எனக் கூறி தொடர்ந்து 4 ஆண்டுகளாக மத்திய அரசு விருதுகள் வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.

Next Story