நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மு.க. ஸ்டாலின்


நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 July 2019 12:06 PM IST (Updated: 8 July 2019 12:06 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

"இந்த மன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மூலம் தமிழக சட்டமன்றத்திற்கு இருந்த சட்டமியற்றும் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்தின் ஆணிவேரை சாய்த்து பார்க்கும் அளவில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 

நீட் விலக்கு மசோதாக்களை நிராகரித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக" மு.க. ஸ்டாலின் பேசினார்.

Next Story