தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு


தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 8 July 2019 12:18 PM IST (Updated: 8 July 2019 12:18 PM IST)
t-max-icont-min-icon

தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக -பாஜக  படுதோல்வி அடைந்தது. அந்த கூட்டணி, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 37 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேனி தொகுதியில் அதிமுக சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இவரது வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அதனால் அவர் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Next Story