இஸ்லாமியர்கள் ஜம் ஜம் புனித நீரை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரக் கூடாது என சொல்வதா? -வைகோ கண்டனம்
இஸ்லாமியர்கள் ஜம் ஜம் புனித நீரை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரக் கூடாது என சொல்வதா? என்று வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
2006ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சி என அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதை தொடர்ந்து அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது . 2006-ல் தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் வைகோ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவதூறு வழக்கின் விசாரணை ஜூலை 15-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நீதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கில் 10% இடஒதுக்கீடு திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்க கூடாது.
மதச்சார்பின்மைதான் நாட்டின் அடித்தளம், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் ஜம் ஜம் புனித நீரை ஏர் இந்தியா விமானத்தில் கொண்டுவரக் கூடாது என சொல்வதா? அவ்வாறு விமானத்துறை அமைச்சகம் முடிவு எடுத்திருந்தால் அதை திரும்ப பெற வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story