கட்டிட தொழிலாளி படுகொலை; தி.மு.க. பிரமுகர் வெட்டி சாய்ப்பு 3 ஊர்களில் புகுந்து கும்பல் வெறியாட்டம் - போலீஸ் குவிப்பு
ஏர்வாடி அருகே 3 ஊர்களில் ஒரு கும்பல் புகுந்து வெறியாட்டம் நடத்தியது. இதில் கட்டிட தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். தி.மு.க.பிரமுகரையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்து வீட்டை சூறையாடியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரியை சேர்ந்த ஆறுமுகபெருமாள் மகன் செல்வக்குமார் (வயது 29), கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டின் அருகில் உள்ள கட்டிடத்தின் முன் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தது. அவர்கள் திடீரென செல்வக்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெட்டுக்காயங்களுடன் செல்வக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால், அந்த மர்ம நபர்கள் அவரை சாலையில் ஓட, ஓட விரட்டி சென்று மீண்டும் வெட்டினார்கள்.
இதில் அலறியவாறு அவர் சாலையில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த பகுதிக்கு ஓடி வந்தனர். இதை பார்த்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றது. ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோதைசேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற அந்த கும்பல் நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்திற்குள் புகுந்தது. அங்கு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த முன்னாள் நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் காமராஜ் (58) என்பவரையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அவர் வீட்டுக்குள் ஓடிச்சென்று மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் திரண்டவுடன் அங்கிருந்து தப்பிய கும்பல், அருகில் உள்ள இளந்தோப்பு கிராமத்துக்கு சென்றது.
அங்கு விவசாயி கனகராஜ் என்பவரின் வீட்டில் புகுந்து அவரை தேடினர். ஆனால் கனகராஜ் வீட்டில் இல்லை. அதனால் அவர் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். மர்ம கும்பலின் வெறியாட்டத்தால் வெட்டுக்காயம் அடைந்த காமராஜ் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோதைசேரி, பெரும்பத்து கிராம மக்கள் திரண்டு நள்ளிரவில் ஏர்வாடி-டோனாவூர் மெயின் ரோட்டில் கோதைசேரி விலக்கிலும், நேற்று காலை ஏர்வாடி-நாங்குநேரி மெயின் ரோட்டிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் மரத்தடிகளை போட்டும், இரும்பு தடுப்புகளை குறுக்கே போட்டும் மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசாரும், வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.
இந்த தொடர் சம்பவங்களால் நாங்குநேரி, ஏர்வாடி, கோதைசேரி பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்த பகுதியில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டிட தொழில் ஏற்பட்ட மோதலால் இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேக்கின்றனர். ஆனால், கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி அருகே உள்ள மஞ்சன்குளத்தை சேர்ந்த ராமர், சுவாமித்துரை, சுப்பையா ஆகியோர் நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story