அனைத்து கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளை அழைத்தது ஏன்? துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்
அனைத்து கட்சி கூட்டத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளை அழைத்தது ஏன்? என்பது குறித்து துரைமுருகனுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் எழுந்து, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
துரைமுருகன்:-துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. தற்போது கூட்டம் முடிந்து விட்ட நிலையில், அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது?.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-69 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடுமையாக போராடினார். தமிழகத்திற்கு அதனை கொண்டும் வந்தார். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால் ஆயிரம் இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஏற்கனவே விளக்கம் அளித்து இருக்கிறார். இருப்பினும் அனைத்து கட்சி கூட்டி, கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த கட்சிகளின் கொள்கைப்படி கருத்துகளை பதிவு செய்தனர். நம்முடைய 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பங்கம் விளைவிக்காத வகையில் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
துரைமுருகன்:-அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தான் கூட்டத்திற்கு அழைப்போம் என்று சொன்னீர்கள். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றால் தேர்தலில் நின்று, அங்கீகாரத்தை பெற்றவர்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கே அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எல்லாம் வந்திருக்கிறார்களே?.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-உங்கள் தலைவர் (மு.க.ஸ்டாலின்) தான் கோரிக்கை வைத்தார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-அங்கீரிக்கப்பட்ட கட்சிகள் மட்டும் தான் அழைக்க வேண்டும் என்றால் ஒரு சில கட்சிகள் தான் வர முடியும். தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்து, செயல்படும் திராவிடர் கழகம் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கும். ஆசிரியர் கி.வீரமணி பல அரிய கருத்துக்களை இந்த கூட்டத்தில் தெரிவித்தார். அவரின் கருத்துக்களை அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது. அது பயன் உள்ள கருத்தாக இருந்தது.
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்:-நான் ஒன்றும் பட்டியல் தரவில்லை. என்னுடைய கருத்தை சொல்லியிருந்தேன். எப்படி என்று சொன்னால், 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விருது கொடுத்தவர் ஆசிரியர் கி.வீரமணி. எனவே, அவர் வந்தால் சிறப்பாக இருக்குமென்று அந்த கருத்தினைத்தான் சொன்னேனே தவிர, மற்றக் கட்சியின் தலைவர்களை எல்லாம் நான் அழைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இருந்தாலும், அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதைத் தவறு என்று நான் சொல்லவில்லை.
நான் அந்த கூட்டத்தில் அதை பற்றி பேசியிருந்தால் பிரச்சினைகள் வேறு மாதிரி, திசை நோக்கிப் போயிருக்கும் என்பதற்காக அதை பற்றி பேசவில்லை. அதுமட்டுமல்ல, முதல்-அமைச்சரே அந்தக் கூட்டத்திற்கு நியாயமாக வந்திருக்க வேண்டும். நான் அதைக்கூட எடுத்துப் பேசவில்லை. இருந்தாலும், மற்றக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஐ.ஜே.கே, கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்றவை ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள், இருந்தவர்கள். நான் கேட்கின்றேன் ஜான்பாண்டியன் கட்சி வந்திருக்கின்றது. புதிய பாரதம் கட்சியின் உறுப்பினர்களும் வந்திருக்கின்றார்கள். அவர்களை அழைத்ததை நான் தவறு என்று சொல்லவில்லை, அவர்கள் எல்லோரும் அழைக்கப்படுகின்ற போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதிநிதிகளாக இருந்தவர்கள், இருக்கக்கூடியவர்களும் அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இருப்பினும் எதிர்காலத்தில் அனைவரையும் அழைப்போம். எல்லோரும் கலந்து கொள்ளும் பட்சத்தில், ஒருநாள் முழுவதும் விவாதம் நடத்தும் சூழ்நிலை உருவாகும். இந்த கூட்டத்தில் நான் கலந்து கொள்ளாததை பற்றி குறிப்பிட்டார்கள். இந்த கூட்டம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்து இருந்தோம். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கலந்து ஆலோசித்து நல்ல முடிவை எடுப்போம்.
ஜெயலலிதா பெயரை குறிப்பிடலாமா?
அமைச்சர் செல்லூர் ராஜூ:-மறைந்த தலைவரின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் உச்சரிப்பது சரியல்ல.., அதுவும் நாங்கள் நெஞ்சில் சுமக்கும் எங்கள் அம்மாவின் பெயரை எப்படி குறிப்பிடலாம். நாங்களும் அவர்களின் தலைவரின் பெயரை பேசினால் ஏற்றுக்கொள்வார்களா?.
மு.க.ஸ்டாலின்:-நான் பலமுறை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரை சொல்வதை பெரும்பாலும் தவிர்த்திருக்கின்றேன். பல நேரங்களில் சொல்லவேண்டிய அவசியம் வருகின்ற போது சொல்லுகின்றேன். அதை சொல்லுவது ஒன்றும் தவறில்லை. நீங்களும் எத்தனையோ முறை எங்களுடைய தலைவர் கருணாநிதியின் பெயரை சொல்லியிருக்கின்றீர்கள். நீங்கள் அவைக்குறிப்பு எடுத்துப் பாருங்கள், பலமுறை சொல்லியிருக்கின்றீர்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றோம்.
மறைந்த தலைவர்கள் காமராஜரின் பெயரைச் சொல்கின்றோம், ராஜாஜி பெயரைச் சொல்கின்றோம், எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்கின்றோம், எனவே இதெல்லாம் தவறில்லை. எனவே, இதை ஒரு குற்றச்சாட்டாக அமைச்சர் சொல்வது எந்த வகையில் நியாயம்?.
சபாநாயகர்:-இல்லை, பொதுவாக மறைந்த தலைவர்களை குறிப்பிடும்போது அவர்களின் பெயருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் பெயரை உச்சரிக்க வேண்டும். இதை அனைத்து உறுப்பினர்களும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :
Next Story