ஜி.எஸ்.டி.யில் இருந்து 69 பொருட்களுக்கு வரி விலக்கு பெற முயற்சி சட்டசபையில், அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்


ஜி.எஸ்.டி.யில் இருந்து 69 பொருட்களுக்கு வரி விலக்கு பெற முயற்சி சட்டசபையில், அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 10 July 2019 4:59 AM IST (Updated: 10 July 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபையில் வணிக வரிகள் மற்றும் பத்திர பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று மாலை நடைபெற்றது.

சென்னை,

இந்த விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் மைதீன்கான் (பாளையங்கோட்டை தொகுதி) பேசும்போது, ‘ஜி.எஸ்.டி.யால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வியாபாரிகள் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள்’ என்றார்.

இதற்கு பதிலளித்து வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘ஜி.எஸ்.டி.யால் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். யாரும் பாதிக்கப்படவில்லை’ என்றார்.

பின்னர் மைதீன்கான் பேசுகையில், ‘கிராமத்தில் தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுக்கும், பிரபல கம்பெனிகள் தயாரிக்கும் பிஸ்கெட்டுகளுக்கும், சீனி மிட்டாய்க்கும், சாக்லெட்களுக்கும் ஒரே மாதிரி ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. அப்பளம், வத்தல் போன்ற பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. இதனை ஏற்க முடியாது’ என்றார். மேலும் சில பொருட்களையும் அவர் பட்டியலிட்டார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் அங்கம் வகிக்கும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் இதற்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீங்கள் (மைதீன்கான்) கூறிய பொருட்கள் உள்பட 69 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு, விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த 35-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நடைபெற உள்ள 36-வது கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story