மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? - ப.சிதம்பரம்
மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144. உயிரிழந்த 144 மனிதர்கள் எந்த சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்.
மனித கழிவுகளை அகற்றும் போது உயரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வெட்கக்கேடானது. மனித கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்க தமிழக அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என கேட்டு உள்ளார்.
தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில் 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 144
— P. Chidambaram (@PChidambaram_IN) July 10, 2019
மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா?
— P. Chidambaram (@PChidambaram_IN) July 10, 2019
இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு!
— P. Chidambaram (@PChidambaram_IN) July 10, 2019
உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்
— P. Chidambaram (@PChidambaram_IN) July 10, 2019
Related Tags :
Next Story