நீட் மசோதா விவகாரம்: அமைச்சர் சி.வி.சண்முகம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
நீட் மசோதா விவகாரத்தில் அமைச்சர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
சென்னை,
சட்டப்பேரவையில் நீட் தேர்வு தொடர்பாக திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, ஸ்டாலின் பேசினார். அப்போது கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது. நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு பற்றி அமைச்சர் சி.வி.சண்முகம் தவறான தகவல் அளித்துள்ளார். இதற்கு பொறுப்பேற்று அவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என் கூறினார்.
இதற்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியதாவது:-
நீட் விவகாரத்தில் நான் எந்த தவறான தகவலும் கூறவில்லை. நான் ராஜினாமா செய்யத் தயார், எதிர்கட்சி தலைவர் ராஜினாமா செய்யத் தயாரா? என கூறினார்.
நீட் மசோதா விவகாரத்தில் அமைச்சர்களின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. வெளிநடப்புக்கு பின்னர் நிருபர்களுக்கு மு.க. ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது. அமைச்சர் சி.வி. சண்முகம் உண்மையை மறைத்துள்ளார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் அமைச்சர் சி.வி.சண்முகம். நீட் விலக்கு கோரி அனுப்பப்பட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என கூறினார்.
Related Tags :
Next Story