ராகுல்காந்தி மீது விமர்சனம்: சுப்பிரமணிய சாமிக்கு தமிழக காங்கிரஸ் எச்சரிக்கை
ராகுல்காந்தி மீது விமர்சனம் தொடர்பாக சுப்பிரமணிய சாமிக்கு தமிழக காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் குறித்து கூறும்போது, தேவை இல்லாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துகிற வகையில் சுப்பிரமணிய சாமி கருத்து கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் அவருக்கு எதிராக நடைபெற்ற வினோதமான ஆர்ப்பாட்டங்கள் எத்தகையது என்பதையும் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ராகுல்காந்தி மீது இத்தகைய இழிவான விமர்சனங்கள் செய்ததை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி அவர் நிறுத்திக் கொள்ளவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஜனநாயக ரீதியில் சுப்பிரமணிய சாமியை கடுமையாக விமர்சிக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story