காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.20 கோடி மோசடி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு


காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.20 கோடி மோசடி வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 July 2019 3:45 AM IST (Updated: 11 July 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடந்த ரூ.20.69 கோடி மோசடி வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின், பல்லாவரம் மற்றும் போரூர் கிளைகளில் கடந்த 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் ரூ.20.69 கோடிக்கு கையாடல் மற்றும் கடன் மோசடி மூலம் முறைகேடு நடந்தது. இதுகுறித்து பல்லாவரம், போரூர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர், இந்த வழக்கை போலீசார் முடித்து வைத்து பூந்தமல்லி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர். இதை கோர்ட்டும் ஏற்றுக்கொண்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர் பாபு என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழக போலீசார் சரிவர வழக்கை விசாரிக்காததால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விசாரணை மாற்றம்

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாபு மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதற்கு பதில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அரசு தரப்பில் கோரிக்கை விடுத்து வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டனர்.

Next Story