அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு என அவை 110வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
சென்னை,
சட்டசபை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* கோவையில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும். 61 ஏக்கரில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு ரூ.178 கோடி ஒதுக்கீடு
* அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த ரூ.2,371 கோடி ஒதுக்கீடு
* அங்கன்வாடிமையங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். 38000 அங்கன்வாடி மையங்களுக்கு பராமரிப்பு நிதி முறையாக வழங்கப்படும்
* சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
* மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்
* ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்
Related Tags :
Next Story