மாநில செய்திகள்

6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து + "||" + 6 MPs without competition; Congratulations to the AIADMK Alliance MPs

6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து

6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்கள் சான்றிதழ் பெற்றனர். அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை,

திமுக கூட்டணி சார்பில்  போட்டியிட்ட  சண்முகம், வழக்கறிஞர் வில்சன்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய   மூன்று பேர் போட்டியின்றி மாநிலங்களவைக்கு  எம்பியாக தேர்வாகினர்.

அதிமுகவின் முகம்மத் ஜான், சந்திரசேகரன் , பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்பியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்வு ஆகி உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களுக்கும் சான்றிதழை வழங்கினார் சட்டப்பேரவை செயலர் சீனிவாசன்.

திமுக கூட்டணி சார்பில்  போட்டியிட்ட  சண்முகம், வழக்கறிஞர் வில்சன்,  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய   மூன்று பேர்  சான்றிதழ் பெறும் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார்.

அதிமுக சார்பில்  சான்றிதழ் பெற்ற  எம்பிக்கள் முகம்மத் ஜான், சந்திரசேகரன் மற்றும்  அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை