"ஜூலை 15-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்" - அன்பழகன் அறிவிப்பு
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் - அண்ணா மன்றத்தில் மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல், பிரசார யுத்தி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story