முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் "யாதும் ஊரே" என்ற இணையதளம்: முதல்-அமைச்சர் பழனிசாமி
முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் "யாதும் ஊரே" என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை,
சட்டசபையில் விதி எண்110 -ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* முதலீடுகளை ஈர்க்க ரூ.60 லட்சம் செலவில் "யாதும் ஊரே" என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும்.
* தொழில் வளர் தமிழகம் என்ற அடையாளத்துடன் கூடிய இணையதளம் அமைக்கப்படும்.
* ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடி மதிப்பில் குடியிருப்புகள் கட்டப்படும்.
* தூத்துக்குடியில் ரூ.634 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* தூத்துக்குடியில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் அளவிற்கு கடல்நீரை குடிநீராக்கும் திறன்கொண்ட ஆலை அமைக்கப்படும்.
* காஞ்சீபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.26 கோடியில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.
* 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நீண்ட கால, குறுகிய கால புதிய தொழில் பிரிவுகள் துவங்கப்படும்.
* கோவையில் 9 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.200 கோடியில் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும்.
Related Tags :
Next Story