நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்


நியூட்ரினோ ஆய்வு மையம்: மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 July 2019 3:38 PM GMT (Updated: 12 July 2019 3:38 PM GMT)

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நியூட்ரினோ ஆய்வு மையம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது கண்டனத்திற்குரியது.
 
மக்களின் பாதுகாப்பில் சிறிதும் அக்கறையின்றி ஒப்புதல் தந்துள்ளது வேதனை அளிக்கிறது.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணியை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  நகர்ப்புறத்துறை அனுமதி வழங்கி உள்ளதா என்று கேள்வியும் எழுகிறது.

நியூட்ரினோ ஆய்வு மையத்தால் சுற்றுச்சூழல், வன விலங்குகள்,  வனப்பகுதிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிக்கு எதிராக முதல்வர், துணை முதல்வர் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து திட்டத்தை கைவிட வைக்க வேண்டும்.

நியூட்ரினோ திட்டம் தொடர்பாக திமுக ஆட்சியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்புகளை கவனத்தில் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story