அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா? அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க தலைமை செயலாளர் உத்தரவு


அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா? அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க தலைமை செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 12 July 2019 4:41 PM GMT (Updated: 12 July 2019 4:41 PM GMT)

அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தமிழகத்தில் இருக்கக்கூடிய 33 மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:- 

சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.

குடிசைவாழ் மக்களுக்கு வீடு கட்டித்தர ஆட்சியர்கள் உதவ வேண்டும். வேளாண் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை வேண்டும்.
குடிமராமத்து உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். குடிநீர் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்பே முடிக்க வேண்டும்.

அரசு அறிவித்துள்ள திட்டங்கள், வளர்ச்சி பணிகளை உரிய நேரத்திற்குள் முறையாக செய்து முடிக்க வேண்டும்.  சட்டம் ஒழுங்கை பேணி காக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர்  சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story