மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு: மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின இடம் கிடைக்காதவர்கள் தேர்வுக்குழுவினருடன் வாக்குவாதம் + "||" + The reserved seats for the most backward sections were packed

மருத்துவ படிப்பு கலந்தாய்வு: மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின இடம் கிடைக்காதவர்கள் தேர்வுக்குழுவினருடன் வாக்குவாதம்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு: மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பின இடம் கிடைக்காதவர்கள் தேர்வுக்குழுவினருடன் வாக்குவாதம்
மருத்துவ படிப்பு கலந்தாய்வில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு பிரச்சினையால் மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை, 

மருத்துவ படிப்பு கலந்தாய்வில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு பிரச்சினையால் மாணவர்கள், பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வுக்குழுவினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினர், முன்னாள் படைவீரர் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. 123 பேர் அழைக்கப்பட்டதில் 81 பேர் பங்கு பெற்று, 48 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து 9-ந் தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில்(9-ந் தேதி) 1,013 பேர் அழைக்கப்பட்டனர். அதில் 977 பேர் தேர்வு செய்தனர். அதேபோல், 10-ந் தேதி 1,490 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதில், 1,379 பேரும், நேற்று முன்தினம் 1,981 பேர் அழைக் கப்பட்டதில், 1,041 பேரும் இடங்களை தேர்வு செய்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்

இந்த நிலையில் நேற்று பொதுப்பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் அழைக்கப்பட்டு இருந்தனர். காலையில் பொதுப்பிரிவினருக்கு நடந்தது. அதன் தொடர்ச்சியாக மிகவும் பிற் படுத்தப்பட்ட பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.

மொத்தம் 2 ஆயிரத்து 176 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 622 பேர் கலந்தாய்வில் பங்கு பெற்று, 334 பேருக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் கிடைத்தன. மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சற்று நேரத்திலேயே நிரம்பின. ஆனால் இந்த இடங்களுக்கு ஏராளமானோர் அழைக்கப்பட்டு இருந்ததாகவும், சிலருக்கு மட்டுமே இடம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இடம் கிடைக்காத மாணவர்களின் பெற்றோர் கலந்தாய்வு வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்வுக்குழுவினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். குறைந்த இடங்கள் இருக்கும்போது எதற்காக இவ்வளவு பேரை கலந்தாய்வுக்கு அழைத்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

இதுகுறித்து தேர்வுக்குழு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் 12-ந் தேதி (நேற்று) மாலை 4 மணிக்கும், 13-ந்தேதி காலை 9 மணிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடைபெற இருந்த கலந்தாய்வு ரத்து செய்யப்படுகிறது. இவர்கள் அனைவரும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.