மாநில செய்திகள்

தென் தமிழகத்தில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் + "||" + Heavy rain in southern Tamil Nadu Chennai Meteorological Center Information

தென் தமிழகத்தில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,

சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, ராமநாதபுரம், தேனி, கடலூர், விழுப்புரம், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு  வாய்ப்பு, மேலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலை (அ) இரவு நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.