மாநில செய்திகள்

வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை; மு.க. ஸ்டாலின் அறிக்கை + "||" + Vellore Fort is our triumph; MK Stalin's statement

வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை; மு.க. ஸ்டாலின் அறிக்கை

வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை; மு.க. ஸ்டாலின் அறிக்கை
வேலூர் கோட்டை நமது வெற்றிக்கோட்டை என மு.க. ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
வேலூர்,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் களப்பணியாற்றி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

வேலூரிலும் வெற்றிக்கதிர் ஒளி திசை எட்டும் வீசட்டும்.  வேலூர் கோட்டை எப்போதும் தி.மு.க.வின் வெற்றிக்கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் களப்பணியாற்றுங்கள்.  வேலூர் தேர்தலில் தி.மு.க. வெற்றி, சூழ்ச்சிகளால் தள்ளிப்போனது.  அதனை எந்நாளும் தட்டி பறித்திட முடியாது என தெரிவித்து உள்ளார்.

புதிய வரைவு தேசிய கல்விக்கொள்கை குறித்து ஆராய தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.  இதுபற்றி பொன்முடி உள்பட 8 பேர் கொண்ட குழு 10 நாளில் ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்.  அந்த அறிக்கையின் அடிப்படையில் தி.மு.க.வின் கருத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் தரப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெங்கு காய்ச்சல் பாதிப்பு; தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம்: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தமிழக அரசு மர்ம காய்ச்சல் என தவறாக பிரசாரம் செய்து வருகிறது என மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
2. இருமொழிக்கொள்கை என்பதில் தமிழகம் பின்வாங்காது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இருமொழிக்கொள்கை என்பதில் இருந்து தமிழகம் பின்வாங்காது என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
3. தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது; மு.க. ஸ்டாலின்
தமிழகத்தில் தமிழ் மொழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4. ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வு: ஆங்கிலம், இந்தியில் மட்டுமே என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது - மு.க.ஸ்டாலின்
ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தினால் போதும் என்ற ரெயில்வேயின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. ஊட்டி மாசு தடுப்பு நடவடிக்கைகள்; அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு
ஊட்டி மாசு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அறிக்கை அளிக்க நீலகிரி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.