மாநில செய்திகள்

மழை வேண்டி பூமிக்கடியில் 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார் + "||" + The prelate sat in a 10-foot deep pit

மழை வேண்டி பூமிக்கடியில் 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார்

மழை வேண்டி பூமிக்கடியில் 10 அடி ஆழ குழியில் அமர்ந்து பிரார்த்தனை செய்த சாமியார்
தருமபுரியில் மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் பூமிக்கடியில் குழி தோண்டி மணி என்ற சாமியார் தவபூஜையில் ஈடுபட்டார்.
தருமபுரி,

தருமபுரியில் மழை வேண்டியும் உலக நன்மைக்காகவும் பூமிக்கடியில் குழி தோண்டி மணி என்ற  சாமியார் தவபூஜையில் ஈடுபட்டார். கடந்த 10 நாட்களாக உணவு உண்ணாமல் விரதமிருந்த அவர், வனதுர்க்கை அம்மன் கோயிலில் அருகே  10 அடி ஆழ குழி தோண்டி பூமிக்கடியில் அமர்ந்து கொண்டார். பின்னர் குழியின் மீது பலகை மற்றும் மண் போட்டு மூடப்பட்டது. அங்கு சுமார் இரண்டு மணி நேரம் தவபூஜை மேற்கொண்ட அவர், இரண்டு நாட்களில் மழை பெய்யும் என்று அருள் வாக்களித்தார்.