பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரிப்பு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 15 July 2019 1:01 AM GMT (Updated: 15 July 2019 1:01 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.03 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.  எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.03 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் உள்ளது.

Next Story