தபால்துறை தேர்வுக்கான விவாதம்: திமுக வெளிநடப்பு


தபால்துறை தேர்வுக்கான விவாதம்: திமுக வெளிநடப்பு
x
தினத்தந்தி 15 July 2019 6:49 AM GMT (Updated: 15 July 2019 6:49 AM GMT)

தபால்துறை தேர்வுக்கான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

சென்னை,

தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்பட்டது தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு தபால் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தபால் துறை தேர்வை தமிழில் நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.

 இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார்  இருமொழி கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது. இது குறித்து மக்களவையில் நீங்கள் குரல் கொடுங்கள், மாநிலங்களவையில் நாங்கள் குரல் கொடுக்கிறோம். எதிர்கட்சியின் நிலைப்பாடுதான் எங்களுடையதும் என கூறினார்.

ஜெயக்குமாரின் பதில் திருப்தியாக இல்லை எனக்கூறி பேரவையில் திமுகவினர் கூச்சல் எழுப்பினர்.

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது,  அவையில் தீர்மானம் நிறைவேற்ற முதலமைச்சருக்கு சம்மதம் போல் தெரிகிறது என கூறினார்.  தொடந்து  நடந்த விவாதத்தில்  திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்

 தீர்மானம் நிறைவேற்ற அரசு ஒத்துவராததால் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்  என கூறி காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதையொட்டி  சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உணர்வுகளை கொச்சைப்படுத்துவதால் வெளிநடப்பு செய்தோம். இந்தியை திணிப்பது தான், தனது கடமை என மத்திய அரசு எண்ணுகிறது. ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே மதம் என்பதை செயல்படுத்த நினைக்கிறது மத்திய அரசு என கூறினார்.

Next Story