மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்; மு.க. ஸ்டாலின் + "||" + The Governor shall direct the State Election Commission to conduct the local elections; MK Stalin

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்; மு.க. ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்; மு.க. ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையரிடம், ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும்.

அரசியல் சட்ட பிரிவின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் உரிய கட்டளையை பிறப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.