தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 16 July 2019 7:20 AM GMT (Updated: 16 July 2019 9:38 AM GMT)

தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.   வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தேனியில் கனமழை பெய்யும். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 31% குறைவாக பெய்துள்ளது என கூறினார்.

Next Story